• Aug 28 2025

மாஸாக என்ட்ரி கொடுக்கத் தயாரான அதர்வா..! வெளியானது "தணல்" படத்தின் வெளியீட்டுத் தேதி.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான கதைகள், தரமான தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய முயற்சிகளை கொண்ட திரைப்படங்களின் வரிசையில் தற்போது ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாக அமைந்துள்ளது 'தணல்'.


இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தன் நடிப்புத்திறனை இன்னொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அந்தவகையில், ‘தணல்’ திரைப்படம் அவரது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். தமிழ் சினிமாவிலுல் ஏற்கனவே பல படங்களில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை லாவண்யா, ‘தணல்’ படத்தின் வாயிலாக மீண்டும் ரசிகர்களை ஈர்க்கத் தயாராகியுள்ளார். 


படத்திற்கான இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் பணியாற்றியுள்ளார். அந்தவகையில், படக்குழுவின் அதிகாரபூர்வ அறிவிப்பின் படி, 'தணல்' திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

Advertisement

Advertisement