• Aug 28 2025

மோசடி வழக்கில் சிக்கிய பிரபலங்கள்...!மஹாவீர்யார் தயாரிப்பாளர் அதிர்ச்சி புகார்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நிவின் பாலி. 2015ஆம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்களை சம்பாதித்தார். அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழிலும் 'ரிச்சி' என்ற படத்தில் நடித்தாலும், அந்த படம் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு பாலியல் புகாரில் சிக்கியிருந்த நிவின் பாலி, தனது மீது எந்த குற்றமும் இல்லை என்பதை சட்டத்தரணிகளின் உதவியுடன் நிரூபித்து அந்த விவகாரத்தில் இருந்து விலகியிருந்தார்.


ஆனால் தற்போது, ‘மஹாவீர்யார்’ திரைப்படம் தொடர்பாக புதிய சிக்கலில் சிக்கியுள்ளார். அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், நடிகர் நிவின் பாலி மற்றும் இயக்குநர் அப்ரித் ஷைன் ஆகியோருக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படம் தயாரிக்கும் கட்டணத்தைப் பற்றி ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் நிதி முறைகேடு தொடர்பாகவே இந்த புகார் என கூறப்படுகிறது.


மோகன்லால் மற்றும் சனல்குமார் சகாபுரம் போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்த 'மஹாவீர்யார்' திரைப்படம் கடந்த ஆண்டில் வெளியானது. தற்போது நடந்திருக்கும் இந்த புகாரால் நிவின் பாலி மீதான விமர்சனங்கள் மீண்டும் பரபரப்பாக எழுந்துள்ளன.

Advertisement

Advertisement