• Jul 12 2025

"DNA" படம் எப்புடி.? கதை நல்லா போனது.. ஆனா கிளைமாக்ஸ்.! வெளியான மக்கள் கருத்து!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

இன்று (ஜூன் 20, 2025) திரையரங்குகளில் வெளியான படம் தான் ‘DNA’. அதர்வா மற்றும் நிமிஷா சஜயன் இணைந்து நடித்துள்ள இப்படத்தை, கதைக்கும் உணர்வுக்கும் முக்கியத்துவம் அளித்து இயக்கியுள்ளார் நெல்சன் வெங்கடேசன். வெளியானதிலிருந்து ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம், ஒரு கிரைம் த்ரில்லராக காணப்படுகின்றது.


‘DNA’ என்பது உறவுகளின் வலிகள், மற்றும் ஒரு மனிதனின் உளவியல் சிக்கல்களையும் மையமாகக் கொண்டு நகரும் படைப்பு. அதர்வா நடித்த கதாபாத்திரம் அனைவரது மனதையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. ஆக்ஷ்ன் காட்சிகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

இருப்பினும், எமோஷனல் சீன்களில், சில இடங்களில் அவரது உற்சாகம் குறைவாகவே காணப்பட்டது. அந்த உணர்ச்சித் தருணங்களை அவர் இன்னும் சிறிது சீர்த்திருத்தியிருந்தால், அனுபவம் அதிகமாக இருந்திருக்கும்.


நிமிஷா சஜயன் மலையாள சினிமாவிலிருந்து வந்துள்ள ஒரு நுட்பமான நடிகை. இவர் படத்தில் அதர்வாவின் மனைவியாகவும், மனநலத்தில் சிக்கியவளாகவும் நடித்துள்ளார். சில காட்சிகளில், உணர்ச்சி தாக்கங்களை மிக இயல்பாக பரிமாறியிருந்தார்.

அத்துடன் படம் பார்த்த சிலர்,தொழில்நுட்ப ரீதியாக தரமான அனுபவத்தையும், ஆரம்பத்தில் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்டிருக்கும் ‘DNA’, தேவையற்ற பாடல்களை தவிர்த்து, கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பாக இருந்திருந்தால் படம் இன்னும் சூப்பராக இருந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement