• Aug 08 2025

ஹாரி பாட்டர் நடிகைக்கு போக்குவரத்து விதி மீறல்...!6 மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடை...!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்து ஹாரி பாட்டர் திரைப்படங்களின் மூலம் உலகளவில் புகழ்பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்ஸனுக்கு, வேகக் கட்டுப்பாட்டை மீறியதற்காக 6 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் நகரத்தில், கடந்த 2024ம் ஆண்டு எம்மா வாட்ஸன் தனது வாகனத்தை 60 கி.மீ. வேகத்தில் ஓட்டியதாகக் கூறப்படுகிறது, ஆனால் அந்தப் பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகம் 48 கி.மீ. மட்டுமே. இந்த சம்பவம் சி.சி.டி.வி. மூலம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று, வாட்ஸன் மீது அதிகாரப்பூர்வமாக குற்றம் சுமத்தப்பட்டது. இதன் விளைவாக, அதிகாரிகள் அவர் மீது 6 மாத வாகன ஓட்டத் தடை விதித்துள்ளனர். மேலும், ரூ.1 லட்சம் (சுமார் £950) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


எம்மா வாட்ஸன், ஹெர்மாயினி கிரேஞ்சராக ஹாரி பாட்டர் திரைப்படங்களில் சிறந்த நடிப்பைக் காட்டி, உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்தவர். 2001 முதல் 2011 வரை வெளியாகிய 8 படங்களில் நடித்துள்ளார். தற்போதைய சூழலில், திரையுலகில் இருந்து ஓரங்கட்டியுள்ள அவர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை தொடர்ந்துவருகிறார்.

Advertisement

Advertisement