தமிழ் சினிமாவில் தற்போதைய ஜெனரேஷனில் அதிக எதிர்பார்ப்பை எழுப்பும் ஹீரோக்களில் ஒருவர் கவின். 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனங்களில் ஆழமாக பதிந்த இவரது படங்கள், தற்போது ஹிட் ரேட்டிங்கில் இருக்கின்றன. இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது.
புதிய வகைச் சினிமாக்களுக்கு பெயர் போன திங்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தில், கவினுடன் முதல் முறையாக நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று பிரபல ஸ்டுடியோவில் நடைபெற்றுள்ளது.
இருவருமே இளைய தலைமுறையின் பிரபல முகங்கள். ஆனால் இதுவரை ஒரே திரையிலோ, ஒரே புரொமோ வீடியோவிலோ ஒன்று சேர்ந்ததில்லை. ரசிகர்களின் கோரிக்கையில் நீண்ட நாட்களாக இருந்த “கவின் – பிரியங்கா” காம்பினேஷன், இப்போது தான் சாத்தியமாகியுள்ளது.

Listen News!