• Aug 08 2025

பணி 2 படத்தின் டைட்டில் ரிவீல் செய்த ஜோஜு ஜார்ஜ்...! வைரலாகும் புது அப்டேட்..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவின் பிரபல நடிகரான ஜோஜு ஜார்ஜ், இயக்குநராக அறிமுகமான பணி திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையிலும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது. தனது முதல் இயக்குநர் பயணத்திலேயே பெரிய வெற்றியை பெற்ற ஜோஜு, தற்போது அதன் தொடர்ச்சியாக பணி 2  படத்தினை  இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.


இந்தப் படங்களில் முதல் பாகத்துக்கு நேரடி தொடர்பே இல்லாமல், புதுமையான கதைக்களத்துடன், புதுமுகங்கள் மற்றும் புதிய சூழல்களில் இப்படங்கள் உருவாகவுள்ளன. குறிப்பாக பணி 2 திரைப்படத்தின் தலைப்பை ஜோஜு ஜார்ஜ் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். படத்திற்குப் டீலக்ஸ்என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.


டீலக்ஸ் படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது முடிந்துள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் கதையின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளதுடன், புதிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் படம் உருவாக உள்ளது.

இசையை விஷ்ணு விஜய் மற்றும் சாம் சி.எஸ் முன்னர் வழங்கியது போல், இந்தப் படத்திலும் அவர்களில் ஒருவர் அல்லது புதிய இசையமைப்பாளர் பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement