தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் , மழை , தனிஒருவன்மற்றும் பொன்னியின் செல்வன் எனப் பல வெற்றிப் படங்களில் நடித்திருந்தார். அத்தகைய ஜெயம் ரவி, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு சிறப்பான தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.
அதன்போது அவர் கூறியதாவது, “என்னை எல்லாரும் 'ஜெயம் ரவி' என்றே அழைக்கிறார்கள் என்றதுடன் இந்தப் பெயர் எனக்கு ரசிகர்களால் கிடைத்தது எனக் கூறியிருந்தார். ‘ஜெயம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு என் பெயர் ஜெயம் ரவி ஆகிவிட்டது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் ஆதரவு தான். அதனால் தான் அந்தப் பெயரை என் வாழ்க்கையின் பகுதியாக ஏற்றுக்கொண்டேன்,” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.
தற்போது ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் "கராத்தே பாபு". சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக்கைப் பகிர்ந்த போது நடந்த சம்பவத்தையும் அந்த நேர்காணலில் ஜெயம் ரவி பகிர்ந்திருந்தார். அதன்போது “படத்தின் போஸ்டரை வெளியிட்டவுடனே எனக்கு அமைச்சர் சேகர் பாபுவிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் என்னிடம், 'ரவி, கராத்தே பாபு என்று படம் எடுக்குறீங்களா?' என்று கேட்டார். அதுக்கு நான் ஆச்சரியப்பட்டேன்." எனக் கூறினார் ஜெயம் ரவி.
மேலும் அந்த அமைச்சர், “தம்பி, நான் தான் பா கராத்தே பாபு..! அந்தப் பெயருக்கே இப்போ உரிமை கோரணும் போல இருக்கு..!” என நகைச்சுவையோடு கூறியதாகவும் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த அனுபவம் ரொம்பவே நல்லா இருந்ததாகவும் கூறியிருந்தார். அத்துடன் இப்படி ஒரு அமைச்சரின் ஆதரவு எனது படத்திற்கு கிடைத்தது ரொம்பவே சந்தோசமாக உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
Listen News!