• Jun 14 2026

அந்த ஒரு அணைப்பு... பாரதிராஜாவின் அஞ்சலி நிகழ்வில் அனைவரையும் கண்கலங்க வைத்த சுஹாசினி

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது உடல் தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோட்டில் அமைந்துள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், நடிகை சுஹாசினியும் அங்கு வந்து பாரதிராஜாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.


அப்போது, துயரத்தில் மூழ்கியிருந்த பாரதிராஜாவின் மனைவியை பார்த்த சுஹாசினி, கண்களில் கண்ணீருடன் அவரை கட்டியணைத்து ஆறுதல் கூறிய காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


பல ஆண்டுகள் திரையுலகில் இணைந்து பயணித்த உறவுகளும், அன்பும், பாசமும் அந்த ஒரு தருணத்தில் வெளிப்பட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement