பாலிவுட் முன்னணி நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அமீர் கானின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ரூ.38 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா போக்குவரத்து துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த விவகாரம் பெங்களூரில் வெடித்துள்ளது. Luxury Rolls-Royce காருக்கான சாலை வரி செலுத்தப்படவில்லை என்பது சோதனையில் தெரியவந்ததாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த கார் நடிகர் அமீர் கானால் வாங்கப்பட்டு பின்னர் அமிதாப் பச்சனிடம் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில், வாகனங்களுக்கு சாலை வரி கட்டும் விதி கடுமையாக உள்ளது. காரின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு வரி கணக்கிடப்படுகிறது. ரோல்ஸ் ராய்ஸ் போன்ற உயர்தர வாகனங்களுக்கு இது லட்சக்கணக்கில் செல்லும். இருப்பினும், சம்பந்தப்பட்ட காருக்கான முழு சாலை வரி செலுத்தப்படவில்லை எனும் காரணத்தால், ரூ.38.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, உரிமையாளரிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், வரி மற்றும் அபராதம் செலுத்தப்படாதால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
Listen News!