• Apr 26 2025

"குட் பேட் அக்லி" பாடலால் கடும் கோபம் கொண்ட கங்கை அமரன்..! எதற்காகத் தெரியுமா..?

subiththira / 4 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் இசை என்பது ஒரு உணர்வைத் தூண்டும் சக்தி. அதனை உருவாக்கி, பல தலைமுறைகளை கவர்ந்தவர்கள் என்ற வரிசையில் இளையராஜா மற்றும் கங்கை அமரன் போன்றவர்கள் முன்னிலையாக இருக்கின்றார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் வெளிவந்த 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஒத்த ரூபா’, 'இளமை இதோ' போன்ற பழைய பாடல்கள் பற்றிய விவகாரம் பரபரப்பாகி வருகின்றது. அந்தப் பாடல்கள் இளையராஜா இசையில் உருவானதாகும். இப்பொழுது அந்தப் பாடலை புதியதாய் மாற்றி அஜித் படத்தில் இணைத்துள்ளனர். ஆனால் அதற்கான உரிமை யாரிடம் கேட்டார்கள் என்ற கேள்விகள் தற்பொழுது எழுந்துள்ளன.


இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து இசைமைப்பாளர் மற்றும் இயக்குநரான கங்கை அமரன் அளித்த பேட்டி மிகவும் வைரலாகியுள்ளது. அதன் போது அவர் கூறியதாவது, “இப்போது அஜித் படம் ஒன்று வந்திருக்கின்றது. அதில் எங்களுடைய பழைய பாடலைப் பயன்படுத்தி உள்ளனர். அதைப் பார்த்த மக்கள் கைதட்டி, விசில் அடித்து , அட்டகாசமாக நடனமாடியுள்ளனர். அப்படிப் பார்த்தால் அந்தத் தயாரிப்பு நிறுவனம் 7 கோடி ரூபாய் சம்பளத்தை இசையமைப்பாளருக்குக் கொடுக்கிறாங்க. உண்மையில் அந்த 7 கோடி ரூபாய் சம்பளம் எங்களுக்கு வரவேண்டியது." என்று கூறியுள்ளார்.

இளையராஜா மற்றும் அவரது சகோதரர் கங்கை அமரன் இருவரும் பல பாடல்களில் இணைந்து பணியாற்றியவர்கள். ஆனால் இப்போது இருவரும் தனித்தனியாகவே இந்த விவகாரத்தில் உரிமையை வலியுறுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement