தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பு மற்றும் இயல்பான நகைச்சுவை கொண்டு ரசிகர்களின் மனங்களை வென்று வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது 'பராசக்தி' மற்றும் 'மதராஸி' ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில், அவருடைய 24வது திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023ம் ஆண்டு 'குட் நைட்' என்ற கமெர்ஷியல் ஹிட் படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகர், SK 24 படத்திற்காக இயக்குநராகத் தேர்வாகியுள்ளார். 'குட் நைட்' திரைப்படத்தில் தனது சிறிய கதையையும் நெகிழ்ச்சியான குடும்ப அன்பையும் ரசிகர்களுக்கு நிரூபித்திருந்தார்.
அதே பாணியில், SK 24 திரைப்படமும் குடும்பம் சார்ந்த, உணர்ச்சி மிகுந்த கதையாக இருக்கப்போகிறது எனக் கூறப்படுகின்றது. குறிப்பாக, தந்தை-மகன் பாசம் என்ற அடிப்படையில் இந்த திரைப்படம் நகரும் என மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் கூறியுள்ளார்.
இந்தப் புதிய திரைப்படத்தில் முக்கிய திருப்பமாகக் கருதப்படும் விடயம் என்னவென்றால், மலையாள திரையுலகத்தின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவல் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!