• Sep 02 2025

டெங்கு வந்த சீரியல் நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? அவரே வெளியிட்ட போஸ்ட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தற்போது சினிமா பிரபலங்களை விடவும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை தக்க வைத்துள்ளார்கள்.

நாளாந்தம்  ஒளிபரப்பாகும் சீரியல்களின் மூலம் தமக்கென தனி இடத்தை தக்க வைப்பதற்காக பலரும் போட்டி போட்டு தமது திறமைகளை வெளிக் காட்டி வருகின்றார்கள். அது மட்டும் இன்றி ரசிகர்களை கவர்வதற்காக விதவிதமாக போட்டோ ஷூட் செய்வதை  வழக்கமாகவும் கொண்டுள்ளார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவி நடிகை ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ஒன்று ரசிகர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. அவர் எப்படி உள்ளார் எனவும் ரசிகர்கள் அதிகம் கேள்வி எழுப்பி  வருகின்றார்கள்.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி மற்றும் மகாநதி போன்ற சீரியலில் நடித்து வந்தவர் தான் திவ்யா கணேஷ். இவருக்கு திடீரென ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் காரணமாக மகாநதி சீரியலில் இருந்து விலகி இருந்தார்.


இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திவ்யா கணேஷ் தற்போது மீண்டும் உடல் நலம் தேறி மீண்டும் ஆக்டிவாக  நடிக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர் அண்மையில் சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் குணமாகி விட்டீர்களா என கேட்டதற்கு தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement