• May 28 2026

விஜய் குடும்பத்தை ஒதுக்கிட்டாரா.. உண்மையில் நிகழ்ந்தது இதுதான்.! சமுத்திரக்கனி விளக்கம்

shali / 1 day ago

Advertisement

Listen News!

முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அந்த நிகழ்வில் முன்னணி அரசியல் மற்றும் திரைப்படத் துறையினர் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், விழாவின் முதல் வரிசையில் அவரது குடும்பத்தினரான மனைவி, மகன் மற்றும் மகள் இல்லாதது குறித்து நடிகர் சமுத்திரக்கனி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


அவர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் கருத்தில், “உங்களை வீழ்த்த நினைத்தவர்களையே நேரில் சந்தித்து கை குலுக்கி அன்பு காட்டும் தலைவர் நீங்கள். அப்படிப்பட்ட நீங்கள் உங்கள் குடும்பத்தை மட்டும் புறக்கணிப்பீர்கள் என நம்ப முடியவில்லை. அந்த மூன்று பேரையும் நீங்கள் விலக்கி விட மாட்டீர்கள் என எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. அவர்களுக்கும் உரிய இடம் வழங்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும், குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. இளைஞர்கள் பல கோடி பேர் விஜயை பின்தொடர்ந்து வருகிறார்கள் என்பதால், அவர் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு செயலிலும் சமூகத்திற்கு பெரிய தாக்கம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஆதரவும் விமர்சனமும் ஒரே நேரத்தில் எழுந்துள்ளன. 

Advertisement

Advertisement