• Aug 20 2025

லியோ படத்த கேவலப்படுத்தினேனா.? லண்டன்ல இதான் நடந்துச்சு.. ஆதவன் பளீச்

Aathira / 6 hours ago

Advertisement

Listen News!

பிரபல காமெடி நடிகர்  ஆதவன்  நிகழ்ச்சி தொகுப்பாளராக மட்டுமில்லாமல் ரேடியோ ஜாக்கி ஆகவும் வீடியோ ஜாக்கியாகவும் பணியாற்றி உள்ளார்.  தமிழ் தொலைக்காட்சிகளில் மட்டுமில்லாமல் திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களிலேயே பெரும்பாலும் நடித்து வருகின்றார். 

சமீபத்தில்  லியோ படத்தை இவர் கேவலமாக விமர்சித்ததாக  சமூக வலைத்தள பக்கங்களில் வீடியோ ஒன்று வைரலானது.  இதை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆதவன் மீது தமது வெறுப்பை காட்டத் தொடங்கினர். 


இந்த நிலையில்,  நடிகர் ஆதவன்  லியோ தியேட்டரில் நடந்தது இதுதான் என்று பேட்டி கொடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில், லியோ படம் பார்த்துட்டு நான் ரிவ்யூ கூட கொடுக்கல. தியேட்டரில் படம் போடுவதற்கு முன்னாடி ஒரு ஃபயர் வார்னிங் கொடுத்தாங்க. அதனால ஃபயர் வண்டி கூட வந்துச்சு.. 

இங்கேயாவது இன்டெர்வல் டைம்ல வெளியே போய் வரலாம். ஆனால் லண்டன்ல அப்படி எல்லாம் போகவே முடியாது. ஃபயர் வார்னிங்  கொடுத்தால் கூட  அவன் எல்லாரையும் ஒழுங்கா செக் பண்ணி தான் வெளியே  அனுப்புவான். நான் அதற்கு சொன்னதை லியோக்கு சொன்னதாக சொல்லிட்டாங்க.. இது அவங்களே அவங்க பணத்தை கேவலப்படுத்துகிற மாதிரி இருக்கு என ஆதவன் தெரிவித்துள்ளார்..  தற்போது ஆதவனின் இந்த கருத்து வைரலாகி வருகின்றது.  

Advertisement

Advertisement