• Apr 27 2025

’ராயன்’ பராக் பராக்... சரியான ரிலீஸ் தேதியை தேர்வு செய்த தனுஷ்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷின் 50வது படமான ’ராயன்’ படத்தை அவரே இயக்கி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் அவருடன் ஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர் ள் என்பதும் தெரிந்தது.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

இந்த நிலையில் தான் ’ராயன்’ திரைப்படத்தை ஜூன் 7ஆம் தேதி வெளியிடப்பட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் டீசர் தற்போது தயார் நிலையில் இருப்பதாகவும் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த டீசரை வெளியிட  திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

மொத்தத்தில் ’ராயன்’ திரைப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டீசர் மற்றும் படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதால் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Advertisement

Advertisement