கவுண்டமணி ,செந்தில் ,வடிவேலுவிற்கு அடுத்து காமெடி நடிகராக இருப்பவர் சந்தானம் இருந்தும் சமீபகாலமாக இவர் ஹீரோவாக நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இவர் ஹீரோவாக நடித்த படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைக்கவில்லை இதனால் 12 வருடத்திற்கு முன்னர் சந்தானம் காமெடியனாக நடித்த "மதகஜராஜா " படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இவர் தற்போது சிம்புவின் 50 படத்தில் காமெடியனாக நடிப்பதற்கு அட்வான்ஸ் வேண்டி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவர் பாஸ் என்கின்ற பாஸ்கரன் 2 படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இனிமேல் இவர் இரண்டு கதாநாயகர்கள் இருக்கும் படத்தினை தெரிவு செய்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கனவே இரண்டு படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான பாதி வேலைகளை முடித்துள்ளார். தற்போது அந்த படங்களில் நடிப்பதை ஒத்தி வைத்து இருப்பதாகவும் இவர் தனது ரசிகர்களின் வேண்டுகோளிற்கிணங்க இனிமேல் ஹீரோவாக நடிக்க போவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!