தமிழ் சினிமாவில் அல்ட்டிமேட் ஸ்டாராக இருக்கும் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய விடாமுயற்சி தோல்வியினை தொடர்ந்து சமீபத்தில் வெளியாகிய குட் பேட் அக்லி திரைப்படம் சராசரியான வரவேற்பை பெற்றுள்ளதுடன் சுமார் 107 கோடி வரை வசூல் செய்துள்ளது. அஜித்தின் நடிப்பிற்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம்.
இந்த நிலையில் தற்போது அஜித் பட இயக்குநர் அஜித் கடமைக்காக படம் நடித்துள்ளார் என கூறியுள்ளார். மேலும் அஜித் நடித்த தோல்வி படங்களில் ஒன்று "ஜி " என கூறியுள்ளார். அஜித் அந்த காலகட்டத்தில் கார் ரேசிங்கில் மிகவும் பிஸியாக இருந்ததால் ஏனோ தானோ என நடித்தார்.
மேலும் கதை சொல்லும் போதே அவருக்கு பிடிக்கல கடமைக்கென்றே ஏனோ தானோன்னு காலேஜ் பையனாக நடித்தார். இந்த படம் போறது கஷ்டம்னு எனக்கு அப்பவே தெரியும் அதே போலவே படமும் தோல்வி அடைந்தது. மேலும் படத்தின் தோல்விக்கு அஜித் மட்டுமே காரணம் எனவும் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
Listen News!