• Apr 26 2025

முத்துவை வம்பிழுக்கும் விஜயா..! மீனாவின் நிலையைப் பார்த்துக் குதூகலிக்கும் சிந்தாமணி..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா மீனாவைப் பாத்து ஏதோ சொந்த உழைப்பில தான் நிப்பேன் என்று டயலொக் எல்லாம் கதைச்ச இப்ப என்னெண்டா என்னோட வீட்ட வச்சுப் பணம் கேக்க வந்திருக்க என்று சொல்லுறார். மேலும் நீ பூக்கட்டுறதுக்காக நான் கடன்காரி ஆகணுமோ என்றதுடன் ஏற்கனவே கோடீஸ்வரி என்று சொல்லி ஒருத்தி ஏமாத்திட்டால் அங்கயும் ஒன்னும் இல்ல என்று கோபமாகச் சொல்லுறார்.

இதனை அடுத்து எனக்கென்று இருப்பது இந்த வீடு மட்டும் தான் அதையெல்லாம் வித்து என்னால பணம் கொடுக்க முடியாது என்று சொல்லுறார். மனோஜும் வீட்டுப் பத்திரத்தைக் கொடுத்து பணம் வாங்கிறது சரியில்ல என்கிறார். அதைக் கேட்ட முத்து நான் உங்க எல்லாரிடயும் வீட்ட வித்துப் பணம் தரச்சொல்லி சொன்னானோ என்று கேக்கிறார்.


இதனை அடுத்து மீனா இது கூட்டுக் குடும்பம் எல்லாரும் இங்க ஒன்னா இருக்கோணும் என்று தான் நாங்க நினைக்கிறோம் என்று சொல்லுறார். இதைக் கேட்ட ஸ்ருதி ஆன்டி உங்கள அவசரக் குடுக்கை என்று சொன்னது கரெக்டா இருக்கு என்கிறார். மேலும் ரவியும் விஜயாவப் பாத்து மற்றவங்க கதைக்கிறத கொஞ்சம் கேளுங்க என்று சொல்லுறார்.

இதனை அடுத்து விஜயா சிந்தாமணி கிட்ட மீனா ஓடர் செய்யுறதுக்கு பணம் இல்லாமல் இருக்கிறாள் என்று சொல்லுறார். இதைக் கேட்டு சிந்தாமணி ரொம்பவே  சந்தோசப்படுறார். அதைத் தொடர்ந்து மீனா சிந்தாமணியின்ர புருசனிட்ட பணம் கேக்கிறார். அதுக்கு அவர் பணம் எல்லாம் தர முடியாது என்று சொல்லுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement