• May 22 2025

ஜோதிகாவுக்கும் மாமியாருக்கும் பிரச்சனையா? திருந்தவே திருந்தாத பயில்வான் ரெங்கநாதன்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் இருந்து கொண்டே திரை உலகினர் குறித்து அவமரியாக பேசி வரும் வெகு சிலரில் ஒருவர் பயில்வான் ரெங்கநாதன் என்பதும் ஆனால் இப்போது அவர் பேசுவதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சமீபத்தில் விஷால் நடித்த ’ரத்னம்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது பயில்வான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று விஷால் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே ’பிசாசு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பாலா அவருக்கு பல்பு கொடுத்தார் என்பதும் ரேகா நாயர் உள்பட பலர் அவரிடம் நேரிடமே நேரடியாக சண்டைக்கு சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பயில்வான் ரெங்கநாதனுடன் நேருக்கு நேர் உரையாடிய ஷகிலா, அவரது மகள் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தபோது பயில்வான் டென்ஷனாகிவிட்டார். உங்கள் குடும்பத்தை இழுத்த போது உங்களுக்கு எப்படி கோபம் வருகிறது, அதே போல் தான் நடிகைகளுக்கும் இருக்கும் என்று கன்னத்தில் அறைவது போல் ஷகிலா கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது இத்தனை அவமானம் அடைந்து பயில்வான் ரங்கநாதன் ஜோதிகா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார். சமீபத்தில் சென்னைக்கு ஜோதிகா ‘ஸ்ரீகாந்த்’ என்ற படத்தின் விளம்பரத்திற்காக வந்த போது அவர் பேசியது குறித்து பயில்வான் கிண்டல் அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி சென்னைக்கு வந்த ஜோதிகா தனது மாமனார் மாமியாரை கூட பார்க்கவில்லை என்றும் விழாவை முடித்துவிட்டு அப்படியே மும்பை கிளம்பிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பயில்வான் ரங்கநாதன் தொடர்ச்சியாக பேசி வருவதை அடுத்து அவர் திருந்தவே மாட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement