தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “தக் லைஃப்”. கமல்ஹாசன் – மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் கமலின் நடிப்பு ‘நாயகன்’ படத்தின் அடுத்த கட்டமாக இருக்கும் என ரசிகர்களால் பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரகுமான் தக் லைஃப் படம் குறித்த தன்னுடைய அனுபவங்கள் மற்றும் இசை உருவான விதம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதன்போது அவர் கூறிய ஒரே ஒரு வரி, ரசிகர்களை வியப்பிலும் சிந்தனையிலும் ஆழ்த்தியுள்ளது.
அந்தவகையில் “தக் லைஃப் படம் நாயகன் மாதிரி இருக்காது" எனக் கூறியிருந்தார். இந்த வார்த்தை மூலம் அனைத்து ரசிகர்களையும் படத்தைப் பார்ப்பதற்கான ஆர்வத்தையும் தூண்டியுள்ளார். 1987ம் ஆண்டு வெளிவந்த நாயகன் திரைப்படம், தமிழ் சினிமாவை உலக அளவில் எடுத்துச் சென்ற படமாக இப்படம் அமைந்திருந்தது. இப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் சில சமூக ஆர்வலர்கள் தக்லைஃப் படத்தினையும் நாயகன் படத்தையும் ஒரே மாதிரி எனக் கருதுகின்றனர். அத்தகைய ஆர்வலர்களுக்கு பதிலடி கொடுக்கின்ற வகையிலேயே ரகுமானின் கருத்துக்கள் காணப்படுகின்றது.
Listen News!