• Jul 20 2025

அஷ்வத் படத்திற்கு நோ சொன்ன நடிகர் பிரதீப் ரங்கநாதன்..!

Mathumitha / 2 weeks ago

Advertisement

Listen News!

"கோமாளி " படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தன் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் "டிராகன்" படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இந்த நிலையில் இவர் சமீபத்திய பேட்டியில் இயக்குநர் அஸ்வத் உடன் ஏற்பட்ட சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


“அஸ்வத், ஓ மை கடவுளே படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க கூப்பிட்டார். நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அவரிடம் கூறிவிட்டேன். பின்னர் 'லவ் டுடே' படத்தை ரிலீசுக்கு முன்பு அஸ்வத்துக்கு காண்பித்தேன். 'லவ் டுடே' படம் ஹிட்டானதால் உடனே நாங்கள் அடுத்த படத்தில் இணைந்தோம்” என கூறியுள்ளார்.

மேலும் பிரதீப் தற்போது விக்கினேஷ் சிவன் இயக்கத்தில் "lik " எனும் படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகின்றார்.

Advertisement

Advertisement