மயோசிட்டிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டு வரும் நடிகை சமந்தா தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும் தன் மன உறுதியையும் திடமான உடல்நலத்தையும் நிரூபித்து வருகிறார். இந்த நோயால் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியாக மாறிய சமந்தாவை சில நெட்டிசன்கள் "ஒல்லிக்குச்சி", "நோயாளி" என விமர்சித்து ட்ரோல் செய்து வந்தனர்.
அவரது தோற்றம் குறித்த தவறான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில் சமந்தா அதற்காக கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தனது வலிமையான ஒர்கவுட் வீடியோவைக் வெளியிட்ட சமந்தா அதனுடன் "You don't get to call me skinny, sickly or any of that crop unless you can do 3 of these first. If you cant.. then read between the frikkin lines" எனக் குறும்பாகவும் நேரடியாகவும் பதிலடி கொடுத்துள்ளார்.
சமந்தாவின் இந்த தன்னம்பிக்கைமிக்க பதில் சமூக வலைதளங்களில் வெகுவாக பாராட்டப்படுவதுடன் பலரும் “அவர் ஒரு போர் வீராங்கனை” என புகழ்ந்து வருகின்றனர். நோயை எதிர்த்து வெற்றி பெறும் அவரது பயணம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறி வருகிறது.
Listen News!