• Apr 16 2026

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் கண்கலங்கி நின்ற நடிகர் ஜெயம் ரவி...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமாகிய விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இறப்புக்குள்ளானார். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய சமாதிக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


அந்த வகையில் முன்னணி பிரபலங்கள் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு விஜயகாந்த் குறித்த தங்களது அனுபவங்கள் மற்றும் வருத்தங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்களும் நடிகர் விஜயகாந்த் அவர்களின் சமாதி இடத்திற்கு சென்று கண்கள் கலங்கி அஞ்சலி செலுத்தியுள்ளார்.


மேலும் நடிகர் விஜயகாந்த் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன். நிறைய நல்ல விடையங்கள் செய்துள்ளார். நான் நடிக்க வந்தபோது என்னை கூப்பிட்டு பாராட்டி இருக்கிறார். நிறைய விடையங்கள் சொல்லி கொடுத்திருக்கிறார். அப்படி ஒரு நல்ல மனிதர் இப்பொது இல்லை அவர் ஆன்மா சாந்தியடையட்டும் என ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement