• Apr 16 2026

எந்த நடிகரும் எடுக்க துணியாத ரிஸ்க்.. தங்கலான் படத்தில் வெளியான விக்ரமின் மிரட்டும் புகைப்படங்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். 

இப்படத்தில்  நடிகை பார்வதி விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் மாளவிகா மோகனன்,பசுபதி, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.


இப்படம், தங்கம் எடுக்கும் தொழிலாளர்களின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்காக உடல் எடையை பாதியாக குறைத்து நடித்துள்ளார் விக்ரம். 

மேலும் இப்படத்தின் ஸ்டாண்ட் காட்சியில் நடித்த போது, விக்ரம் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் விலா எலும்பு முறிந்து சில மாத ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இப்படத்தில் நடித்தார்.


தங்கலான் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த திரைப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளதாம்.

இந்த நிலையில் தங்கலான்  படத்தில் நடிகர் விக்ரமின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்,



Advertisement

Advertisement