• Jan 18 2025

நானும் குழந்தை பெத்துக்க போறேன்.. எனக்கும் வயசு ஏறிட்டே போகுது! திடீர் முடிவில் பிரியங்கா

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் விஜே பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இவர் நிகழ்ச்சியை செம ஃபன்னாக தொகுத்து வழங்கி வருவார் என்பதும் முக்கியமாகும்.

மூன்று முறை தொடர்ச்சியாக சிறந்த பெண் தொகுப்பாளினி விருது பெற்றவர். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய தொலைக்காட்சி தொகுப்பாளர்களில்  விஜே பிரியங்காவும் ஒருவர் ஆவார்.

இந்த நிலையில், அண்மையில் இவர் வழங்கிய பேட்டி ஒன்றில் எனக்கு குழந்தை பெத்துக்கணும் போல இருக்கு என ரொம்பவும் எமோஷனலாக பேசி இருந்தார். தற்போது அது வைரலாகி உள்ளது. அதன்படி அவர் கூறுகையில், 

என்னோட லைப்ளையும் சில சந்தோசங்கள் வேணும். என்னையும் யாராவது பயங்கரமா லவ் பண்ணனும், அப்புறம் குழந்தை பெத்துக்கணும் அப்படின்னு ரொம்ப ஆசையா இருக்கு. 


என்னோட முதல் கணவரால்  எனக்கு சந்தோஷமே இல்ல. என்னுடைய திருமண விஷயத்தில் தப்பான முடிவு எடுத்துட்டேன். இனிமேல் என்னோட லைஃப்ல எடுக்க போற பெரிய முடிவுகளால அம்மாவை எந்தவிதத்திலும் வருத்தப்பட வைக்க மாட்டேன். 

நான் போட்டு வச்சிருக்கிற ப்ளான்ல ஒவ்வொரு விஷயத்தையும் நிறைவேத்திட்டே வாரன். முதல்ல பிக் பாஸ்க்கு போறது, கார் வாங்குறது, மாடி வீடு கட்டுவது, அப்படின்னு ஒவ்வொன்னா முடிச்சுட்டே வாரேன். 


ரீசண்டா ஹெல்த்தில் கான்ஸ்டெட் பண்ணிட்டு வாரேன். அவரும் என்னை  பிட்டாக்கிய தீருவேன் அப்படிங்கிற லட்சியத்தோட கோச்சிங் பண்ணிட்டு இருக்காரு. எனக்கும் வயசு ஏறிட்டே போகுது. எனக்கு ஒரு குழந்தை பெத்துக்கணும்னு ஆசை இருக்கு. என்னை யாராவது பயங்கரமா லவ் பண்ணனும், அப்புறம் குழந்தையும் பெத்துக்கணும் இந்த மாதிரி விஷயங்கள் நடக்காத என ஏக்கமா இருக்கு.


என்னோட தம்பி குழந்தையை பார்க்கும் போதும், அது கூட விளையாடும் போதும் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு, சந்தோஷமா இருக்கு. அந்த குழந்தை தான் இப்போ என்னை சர்வ் பண்ண வச்சிட்டு இருக்கு. அந்த குழந்தை தான் சிரிப்பு, சந்தோஷம், நிம்மதி எல்லாத்தையும் என் வீட்ல திரும்ப கொண்டு வந்து இருக்கு, கடவுள்தான் எனக்கு அந்த குழந்தையை அனுப்பி வைத்திருக்கிறார். 

அவளை பார்க்கும்போது நான் என்னையே பார்க்கிற மாதிரி இருக்கும். நான் சின்ன வயசுல எப்படி இருந்தனோ அப்படியே தான் அவளும் இருக்கா அவளுக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். அவதான் என்னோட முதல் குழந்தை. இவ்வாறு ரொம்ப எமோஷனலா பேசி இருக்கிறார்  பிரியங்கா. தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement