• May 11 2024

கமல் ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகா பார்த்துள்ளீர்களா...இதோ பாருங்க

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.


கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும் வென்றுள்ளார்.


இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்திருந்தார்.


மேலும் இவரின் திரைத்துறை வாழ்க்கையானது 1960 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்தது. இந்தத் திரைப்படத்தில் நடித்தற்காக ஜனாதிபதி விருது பெற்றார். 


இந்நிலையில் இவர் கடந்த 1988ஆம் ஆண்டு சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். 


2004ஆம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்து வந்த கமல் - சரிகா ஜோடி அதன்பின் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில், நடிகை சரிகாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement