• Apr 19 2024

ஷுட்டிங் ஸ்பாட்டில் தோசை சுட்டு அசத்திய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்- தலைவி நீங்க வேற லெவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு அடுத்ததாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் அதிகம் நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர்.

மேலும் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் மிகவும் பிரபலடைந்தவர் ஐஸ்வர்யா நடிப்பில் தற்பொழுது டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி படங்கள் தயாராகி வருகின்றன.


இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தோசை சுட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ரசிகர்கள் எனக்கு ஒரு தோசை பார்சல் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


மேலும் ஐஸ்வர்யா ராஜேசின் அண்ணனான மணிகண்டன் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்குபற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement