விஜய் டிவியில் பிக் பாஸ் 8ம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் கடத்த வாரம் நடந்த சம்பவங்கள் குறித்து பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா ஒரு வீடியோவை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில் "ஒரு வீடு என்றால் எல்லோரும் சமம் தான். ஆட்கள் குறைந்துவிட்டதால் சமையல் வேலைக்கு ஆட்கள் குறைக்கலாம் என சொன்னார் அருண். மற்ற வேலைகளை செய்ய ஆட்கள் வேண்டும் என்பதால் அவர் அப்படி சொன்னார். ஆனால் அதனை மற்ற போட்டியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.
கேம் விளையாடுவது தான் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலை. லேபர் வேலை செய்பவருக்கு இது போதும் என தீபக் பேசியதை எல்லாம் விட்டுவிட்டார்கள். ஆனால் அருண் எப்படி நினைக்கிறார் என்பதை மட்டும் ஊதி பெரிதாக்கிவிட்டார்கள். விஜய் சேதுபதியும் இதேத்தான் செய்தார். ஷோ முடிந்தபிறகு மைக்கில் பேசியது, கன்பெக்ஷன் ரூமில் பேசியது எல்லாம் அவரை தாக்குவது மாதிரி இருக்கு. அதற்கு பேசாமேலேயே விட்டிருக்கலாமே என விஜய் சேதுபதியை தாக்கி பேசி இருக்கிறார் அர்ச்சனா. இதோ அந்த வீடியோ
Listen News!