• Jan 19 2025

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இரண்டாம் நாள் வசூல் எத்தனை கோடி தெரியுமா?- அப்போ ஜப்பான் படம் அவ்வளவு தானா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


கார்த்திக் சுப்புராஜ் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த திரைப்படம் தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படத்தில் இவர்களுடன் ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர், இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

1975ம் ஆண்டு நடக்கும் பீரியட் ஜானர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தமிழ் சினிமாவில் முதல் கறுப்பு ஹீரோ என்ற டெம்ப்ளேட்டை வைத்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார். முக்கியமாக படத்தின் கடைசி 40 நிமிடம் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது. அதேபோல் வழக்கம் போல நடிப்பில் அசுரத்தனம் காட்டியுள்ளார் எஸ்ஜே சூர்யா. 


இந்நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு முதல் நாளில் ஓபனிங் குறைவாக இருந்தாலும், பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும் இந்தப் படத்துக்கு முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. இன்னொரு பக்கம் கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால், இரண்டாவது நாளில் இருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 


அதன்படி, இந்தப் படம் இரண்டாவது நாளில் 4.50 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இன்று தீபாவளி என்பதால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement