• Jan 19 2025

நாக சைதன்யாவின் அம்மா மகனின் திருமணத்தை புறக்கணித்தாரா? வெளியான உண்மை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நாகார்ஜுனா. இவருடைய மகனான நாக சைதன்யாவுக்கு கடந்த நான்காம் தேதி தான் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்ற முடிந்தது. அவர் சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

நடிகர் நாகார்ஜுனாவுக்கும் அவருடைய முதலாவது மனைவி ஆன லட்சுமிக்கும் மகனாக பிறந்தவர் தான் நாக சைதன்யா. நாகார்ஜுனா லட்சுமியை விவாகரத்து செய்து அதற்குப் பிறகு நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார். அவரும் பிரபல ஹீரோவாக வலம் வருகின்றார்.

d_i_a

லட்சுமியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். அவர் நாகார்ஜுனாவை விவாகரத்து செய்த பிறகு சரத் விஜயராகவன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார். அதன் பின்பு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.


இந்த நிலையில், தனது மகனான நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்ட லட்சுமி, அவருடைய திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற வதந்தி எழுந்துள்ளது. இது தொடர்பில் தற்போது ஏகப்பட்ட சந்தேகங்களை ரசிகர்கள் கிளப்பி வருகின்றார்கள்.


ஆனாலும் நாக சைதன்யாவின் திருமணத்தில் அவருடைய அம்மாவான லட்சுமி கலந்து கொண்டுள்ளார்.  மேலும் அவர் இரண்டாவதாக திருமணம் செய்த சரத்தும் கலந்து கொண்டுள்ளார். இதன் காரணத்தினால் நாக சைதன்யாவின் திருமணத்தை லட்சுமி புறக்கணித்தார் என்ற தகவலில் துளியும் உண்மை இல்லை என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

Advertisement

Advertisement