• Mar 15 2025

அடுத்த பிக் பாஸ்க்கு தயாராகும் தீபக்கின் மனைவி.! ஹவுஸ்மேட்ஸை போட்டுத் தாக்கிய சம்பவம்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் இன்றைய தினம் 76 வது நாளில் கால் பதித்து உள்ளது. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. அதில் தீபக்கின் குடும்பம் மஞ்சரியின் குடும்பமும் வந்துள்ள வீடியோக்கள் வைரலாகி உள்ளன.

பிக்பாஸ் சீசன் எட்டில் இந்த முறை வித்தியாசமாக காலையில் போடப்படும் பாடலுக்கு முன்பாகவே தீபக்கின் குடும்பம் ரகசியமாக வீட்டிற்குள் நுழைந்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. அதன் பின்பு தீபக் தனது குடும்பத்துடன் என்ஜாய் பண்ணிய வீடியோக்கள் இணையத்தை கவர்ந்துள்ளன.

இதை தொடர்ந்து மஞ்சரியின் குடும்பத்தார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இதன்போது மஞ்சரி தனது குழந்தையை பார்த்து அம்மாவ டெவலில் பார்த்து பயந்தியா? என கேட்க,  இல்ல நீ என் அம்மா.. என்று அவரின் மகன் சொன்ன வார்த்தை பல ரசிகர்களையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.

d_i_a

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற தீபக்கின் மனைவி அங்குள்ள ஹவுஸ்மேட்சை பங்கமாக கலாய்த்து வருகின்றார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை என்டர்டைமென்ட் பண்ணி வருகின்றது.


அதாவது ஏற்கனவே சௌந்தர்யா வீட்டில் செய்யும் குறும்புத்தனம் பற்றியும் அவர் கோபப்பட்டால் கார்டூன் ஷோ போலத்தான் இருக்கும் எனவும் கலாய்த்து இருந்தார். அதன் பின்பு அருணையும் பங்கமாக கலாய்த்து இருந்தார்.

தற்போது ராயனுக்கு ஒரு பாடி லாங்குவேஜ் இருக்குது என்று ராயனை போல நடந்து காட்டி மரண கலாய் கலாய்த்துள்ளார். மேலும் அவர் ஒரு கார்ட்டூன் கேரக்டர் போல நடப்பதாகவும் சொல்ல, இதை கேட்டு அவர் கோவிக்க போகின்றார் என்று சக போட்டியாளர்கள் சொல்லுகின்றார்கள். ஆனாலும் நீ கோவிச்சா  கோபித்து விட்டுப் போ என்று எதார்த்தமாக பேசுகிறார்.

மேலும் ஜாக்குலின் பாடி லாங்குவேஜ்  இப்படி தான் எனவும் அவரிடம் சப்பாத்தி கொடுத்தால் நல்லா சுட்டு தருவா என அவரையும் கலாய்த்து தள்ளி உள்ளார். தற்போது தீபக்கின் மனைவி ரசிகர்களை செம்மையாக என்டர்டைமென்ட் பண்ணி வருகிறார்.

Advertisement

Advertisement