• May 17 2024

இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட தளபதி விஜய்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தனது நகைச்சுவை நிறைந்த நடிப்பினாலும், நடனத்தினாலும் மக்கள் மனதை ஈர்த்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தளபதி விஜய்.

விஜய்க்கு தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. இவரின் தமிழ் திரைப்படங்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இவ்வாறு மொழிமாற்றம் செய்யப்பட்ட "துப்பாக்கி, ஜில்லா, ஏஜென்ட் பைரவா" உட்பட பல படங்கள் வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை விஜய் ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு சர்ப்ரைஸ் தயாராகியுள்ளது. அதாவது தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "துப்பாக்கி" திரைப்படத்தின் தெலுங்கு பதிவு ஹைதராபாத்தில் இருக்கும் சுதர்சன் தியேட்டரில் மீண்டும் பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை ஒளிபரப்ப இருக்கின்றது.

இதுவரை எந்த நடிகருக்கும் இப்பிடி ஒரு அங்கீகாரம் ஆந்திராவில் கிடைத்தது இல்லை, இதனால் விஜய்க்கு இப்பிடி ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளமையை இட்டு ரசிகர்கள் பெரும் குதூகலத்தில் இருக்கின்றார்கள். இவ்வாறு நம்ம தளபதி விஜய் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது பிற மொழித் தேசங்களில் கொடிகட்டிப் பறந்து வருகின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement