• Jan 19 2025

எதிர்நீச்சலில் பெரிய ட்விஸ்ட்..? பைட்டிங், சேஸிங் என்று ஃபயர் மூடில் சீரியல் பெண்கள்! குணசேகரனின் ஆட்டம் க்ளோஸ்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஆக்சிடென்ட் ஆகி இருக்கும் சக்திக்கு துணையாக ஜனனி மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று ஈஸ்வரி சொல்ல,  அதற்கு சக்தி எதிர்பார்க்காத பதிலை சொல்கிறார்.

எதிர்நீச்சல் சீரியல் தற்போது அதில் உள்ள பெண்கள் எப்படி முன்னேற்றம் அடைகிறார்கள் என்ற கதையை மையமாகக் கொண்டே நகர்கிறது. 

தற்போது அந்தப் பெண்களுக்கு துணையாக சக்தி இருந்தாலும், பெண்களால்  சுயமாக முடிவெடுக்கவில்லையே என்ற கேள்வி ரசிகர்களுக்கு காணப்பட்டது.

தற்போது ஆக்ஸிடெண்ட் பட்டு சக்தி மருத்துவமனையில் இருக்க, காணாமல் போன தர்ஷனியை பெண்கள் மட்டும் எப்படி தேடி கண்டுபிடிக்க உள்ளார்கள் என்பதே பெரிய ட்விஸ்ட்டாக உள்ளது.


இந்த சீரியலில் எப்போதுமே குணசேகரன் தான் எல்லா இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்க, பெண்கள் வாயினால் மட்டுமே சவால் விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசியில் அவர்கள் தோற்றுப் போய் விடுவார்கள். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சீரியல் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றுள்ளது. அதாவது, ஏற்கனவே குணசேகரன் வீட்டில் உள்ள பெண்களுக்கு சக்தி ஆதரவாக மாறிவிட்டார். தற்போது கதிரும் நந்தினியை புரிந்து கொண்டுள்ளார்.

இப்போது காணாமல் போயிருக்கும் தர்ஷனியை எந்த ஒரு ஆண் துணையும் இல்லாமல் நாங்களே கண்டுபிடித்து கூட்டி வருவோம் என்று பெண்கள் எல்லாரும் சபதம் எடுத்து உள்ளனர்.


இந்த நிலையில், தற்போது வெளியான ப்ரோமோவில், சத்தி ஆக்சிடென்ட் ஆகி இருந்த போதும், ஜனனியும் உங்க கூட வந்து தர்ஷனையும் கண்டுபிடித்தா தான் நான் சந்தோஷப்படுவேன். ஜனனி உங்க கூட இருக்கிற தான் எனக்கு சந்தோசம் என சக்தி எதிர்பாராத பதிலை சொல்கிறார்.

இதைத் தொடர்ந்து வீட்டு பெண்கள் எல்லோருமே தர்ஷினியை தேடி காரில் போகின்றார்கள்.

மறுபக்கம் தர்ஷினியை அடைத்து வைத்திருக்கும் நிலையில், அவர் ஒரு பேப்பரில் காப்பாற்றும் படி எழுதி, ஜன்னல் வழியாக வெளியே போடுகிறார்.

அந்த நேரத்தில் எல்லா பெண்களும் காரில் வந்து கொண்டிருக்க, முதன் முறையாக ஈஸ்வரி காரை ஓட்டிக் கொண்டு வருகிறார்.

இவ்வாறு எதிர்நீச்சல் சீரியலில் தற்போது தான் துணிச்சலான காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்க, இனி அவர்கள் தர்ஷினி எவ்வாறு  மீட்டெடுப்பார்கள் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement