• May 10 2024

பகத்தின் குழந்தையும் என்னுடையது தான்- உணர்ச்சி வசப்பட்டு பதிவினைப் போட்ட கமல்ஹாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள நடிகரான பகத் பாசில் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா மற்றும் கமலின் விக்ரம் படங்கள் இவரை சிறந்த நடிகராக அறிமுகப்படுத்தியுள்ளது.

விக்ரம் படத்தில் ரகசிய உளவாளியாக இவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் அதிக வரவேற்பை பெற்றது.
இந்திய மொழிகளில் வெளியான இந்தப் படம் மலையாளத்தில் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இதற்கு காரணம் பகத் பாசில் இந்தப் படத்தில் அதிகமான காட்சிகளில் நடித்துள்ளதோடு மிரட்டலான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்ததுதான்

இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் மலையன் குஞ்சு என்ற மலையாளப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் தற்போது வெளியாகி மிகந்த வரவேற்பை பெற்றுள்ளது. நிலச்சரிவில் சிக்குபவர்கள், மற்றும் அந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள் குறித்த கதைக்களத்தோடு இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்த ட்ரெயிலரைப் பார்த்த கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் பகத்தின் குழந்தையும் தன்னுடையதுதான் என்றும் எப்போதும் மேன்மை வெல்லட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடைய ஏஜெண்ட்கள் அனைவரும் வெற்றிப்பெற வேண்டும் என்றும் ஒரு குழு என்றால் என்ன என்பதை காட்டுங்கள் என்றும் உணர்ச்சிப்பூர்வ பதிவை வெளியிட்டுள்ளார். இதேபோல நடிகர் சூர்யாவும் பகத்தின் இந்த ட்ரெயிலருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இந்த வித்தியாசமான முயற்சியின் ஒளிப்பதிவை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தனது அன்பும் மரியாதையும் எப்போதும் பகத்துக்கு உண்டு என்றும் சூர்யா குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்துவரும் பகத்திற்கு இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

.

Advertisement

Advertisement

Advertisement