தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகன் தான் அருண் விஜய். இவர் அப்பாவை போலவே நடிகராக வேண்டும் என்ற ஆசையில் 'முறை மாப்பிள்ளை' என்ற படத்தில் மூலம் அறிமுகமானார்.
இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் நடனம், ஃபைட் என எல்லாவற்றிலும் திறமை கொண்ட நடிகராக காணப்பட்டாலும் இவருக்கு ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.
முன்னணி நடிகராக மாற முடியாவிட்டாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தொடர்ந்து நடித்து வருகின்றார். மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பின்பு அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மேலும் தடம், குற்றம் 23, சாகோ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
இவருடைய நடிப்பில் இறுதியாக வணங்கான் திரைப்படம் வெளியானது. இந்த படமும் நல்ல விமர்சனங்களை பெற்று அருண் விஜயின் நடிப்புக்கு தீனி போட்டது.
இந்த நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் கலந்து கொண்ட அருண் விஜய் தனுஷ் பற்றியும் தற்போது தனுசுடன் இணைந்து நடித்து வரும் இட்லி கடை பற்றியும் சில அப்டேட் கொடுத்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், தனுஷின் ராயன் படம் பார்த்த பிறகு அவருடன் எப்படியாவது இணைந்து ஒரு படம் என்றாலும் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன்படியே இட்லிகடை படத்தில் தற்போது நடித்து வருகின்றேன்.
இட்லி கடை பட சூட்டிங் போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தில் டெய்லரை காட்டினார். அப்பவே நான் சொன்னேன் இந்த படம் ரொம்ப ஹிட் ஆகப்போகுது, யுத் ரொம்ப கனெக்ட் பண்ணும் என்று.. அதன்படியே இன்று இந்த படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.
தனுஷ பத்தி சொல்லனும்னா அவர் உண்மையாகவே மல்டி டேலண்ட் பர்சன். 24 மணி நேரமும் அவர் வேலை செல்வதாக எல்லாருமே சொல்வார்கள். நானும் அதை நேரில் பார்த்தேன். ஷார்ட் முடித்துவிட்டு பார்த்தால் ஸ்கிரிப்ட் எழுதிக் கொண்டு இருப்பார்.
Listen News!