• Jan 19 2025

40 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி சிம்ரன்.. மாப்பிள்ளை தொழிலதிபரா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

தமிழில் சில திரைப்படங்களும் பாலிவுட்டில் பல திரைப்படங்களிலும் நடித்த நடிகை 40 வயதில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

எஸ்ஜே சூர்யா நடித்த இயக்கியஅன்பே ஆருயிரே என்ற திரைப்படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை நிலா.  தமிழ் சினிமாவில் சிம்ரன் உச்சகட்டத்தில் இருந்த போது சிம்ரனை போலவே இவரும் இருந்ததால் இவர் குட்டி சிம்ரன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



அன்பே ஆருயிரேபடத்திற்கு பின்னர் பவன் கல்யாண் நடித்த தெலுங்கு திரைப்படத்தில் நடித்த நிலா, அதன் பின்னர்ஜாம்பவான்’ ’காளை’ ‘ஜகன்மோகினிஉள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். அதன் பின்னர் அவர் பாலிவுட் சென்ற நிலையில் மீண்டும் எஸ்ஏ சூர்யா இயக்கத்தில் உருவானஇசைஎன்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்றாலும், அதன் பின்னர் தொடர்ச்சியாக அவர் பாலிவுட் படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை நிலா தான் ஒருவரை மூன்று வருடங்களாக காதலித்து வருவதாகவும் அவரை விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் கூறியிருந்தாலும் தனது வருங்கால கணவர் யார் என்பதை குறித்த தகவலை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று திடீரென தனது காதலர் ரஷீத் என்பவரை ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் திருமணம் செய்து கொண்டார். ரஷீத் என்பவர் மும்பை தொழிலதிபர் என்று கூறப்படுகிறது.



திருமண புகைப்படங்களை நிலா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவில்இனிமேல் மகிழ்ச்சி, சண்டை, சிரிப்பு, கண்ணீர், நினைவுகள் என்னுடைய வாழ்க்கையில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த திருமண பொருகைப் படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதை எடுத்து ரசிகர்கள் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement