• Jan 19 2025

18 வருடங்கள் கழித்து அஜித் எடுக்கும் 3 அவதாரங்கள்... ’AAA’ மாதிரி இல்லாமல் இருந்தால் சரி

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

அஜித் நடிக்க இருக்கும்குட் பேட் அக்லிஎன்ற படத்தின் அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வமாக வெளிவந்த நிலையில் தற்போது வெளிவந்த தகவலின் படி இந்த படத்தில் அஜித் மூன்று வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் திரைப்படம்குட் பேட் அக்லி’. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருப்பதாக தற்போது வெளிவந்திருக்கும் தகவல் காரணமாக அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் எல்லையில் உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியஅன்பானவன் அசராதவன் அடங்காதவன்என்ற ’AAA’ படத்தில் சிம்பு மூன்று வேடத்தில் நடித்தார் என்பதும் அந்த படம் படு மோசமான தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



அதேபோன்ற ஒரு படமாக இல்லாமல் அஜித்துக்கு ஏற்ற மாதிரி கதையம்சம் கொண்ட படமாக இருந்தால் மூன்று வேடங்களில் அஜித் நடித்தவரலாறுபோல் இந்த படம் போல் இந்த படமும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அஜித் நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவானவரலாறுதிரைப்படம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் அப்பா மற்றும் இரண்டு மகன்கள் என அஜித் 3 வேடங்களில் நடித்திருந்தார் என்பதும், அந்த படம் பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கு லாபம் சம்பாதித்து கொடுத்ததாக கூறப்பட்டது.

அதேபோல் அஜித் மீண்டும் ஒரே படத்தில் 3 கேரக்டர்களில் நடிக்க இருக்கும் நிலையில் அதேபோன்று வெற்றியும் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement