• Jan 18 2025

2 படம் தான் ஹிட்.. அதற்குள் ஒரு கோடி ரூபாய்க்கு கார் வாங்கிய பூங்குழலி..!

Sivalingam / 11 months ago

Advertisement

Listen News!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’கட்டா குஸ்தி’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே சமீபத்தில் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது அவர் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய காரை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மலையாளத்தில் நடித்து வரும் நிலையில் விஷால் நடித்த ’ஆக்சன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் அவர் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ சாய் பல்லவி நடித்த ’கார்கி’ ஆர்யா நடித்த ’கேப்டன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் அவருக்கு ’பொன்னியின் செல்வன்’ படம் தான் மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.

இந்த படத்தில் அவர் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்த நிலையில் அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அந்த படம் வெளியான போது பலர் அவரை பூங்குழலி   என்று தான் அழைத்தனர். இந்த படத்தை அடுத்து விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்த ’கட்டா குஸ்தி’ என்ற திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

ஆனால் அதே நேரத்தில் துல்கர் சல்மான் உடன் நடித்த ’கிங் ஆப் கோதா’ படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நான் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்ஃலைப்’ என்ற படத்தில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’கட்டா குஸ்தி’ ஆகிய இரண்டு ஹிட் படங்களில் மட்டுமே நடித்த ஐஸ்வர்யா லட்சுமி புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளார். range rover Evoque 2024 என்ற காரை ஐஸ்வர்யா லட்சுமி வாங்கியுள்ள நிலையில் இந்த  சுமார் 75 லட்சம் முதல் ஒரு கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து புதிய காருடன் உள்ள புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement