• Jan 19 2025

பெத்த பொண்ணையே கடத்தி நாடகமாடும் AGS..! பழி சுமக்கும் ஜீவானந்தம்?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான எதிர்நீச்சல் சீரியலில் வெளியான ப்ரோமோவில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

அதில் குணசேகரன், கரிகாலன் மற்றும் ஜான்சிராணியிடம்  நான்  சொல்லும் போது என்ன ஏதுன்னு கேட்காம கிளம்பி வந்துடனும், உங்களுக்கு செய்ய வேண்டியது நான் செய்றேன் என்று கூறுகிறார்.



மறுபக்கம் ஞானம் மனம் உடைந்த நிலையில் உட்கார்ந்து இருக்க, நந்தினி சொன்னதுக்கு தான் இப்படி இருக்கியா? என்று கதிர் கேட்க, சத்தியமான நான் தப்பான எண்ணத்தில் சொல்ல வரல என்று நந்தினி சொல்ல, நீ வாய மூடு என்று அவரை அடக்குகிறார் கதிர்.  

இதை அடுத்து தர்ஷினியை அடைத்து வைத்திருக்கும் ரவுடிக்கு போன் செய்த குணசேகரன்,  நான் வர வரைக்கும் என் பொண்ண நல்லபடியா பார்த்துக்கோ என்று கூறுகிறார். இது தான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement