• Jan 18 2025

’ரிபெல்’ படத்தை அடுத்து 2 வாரங்களில் 2 படங்கள்.. ஜிவி பிரகாஷின் லைன் அப்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!


ஜிவி பிரகாஷ் நடித்தரிபெல்திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களிலும் நல்ல வசூலை பெற்றதாகவும் கிட்டத்தட்ட இந்த படத்தின் பட்ஜெட் தொகை தயாரிப்பாளருக்கு கிடைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

கல்லூரி மாணவனாக ஜிவி பிரகாஷ் நடித்திருந்த இந்த படம் முதல் பாதி ரொமான்ஸ் ஆகவும் இரண்டாம் பாதியாக அதிரடி ஆக்சன் ஆகவும் இருந்ததை அடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்தகள்வன்என்ற திரைப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்த இன்னொரு படமானடியர்என்ற படமும் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



ஏப்ரல் 4, ஏப்ரல் 11 என அடுத்தடுத்த வாரங்களில் ஜிவி பிரகாஷ் தனது படங்களை வெளியிட்டு வருகிறார் என்பதும் ஏற்கனவே வெளியானரிபெல்படத்தையும் சேர்த்து இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் ஜிவி பிரகாஷ்-க்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 
அதுமட்டுமின்றி இசையமைப்பாளராகவும் ஜிவி பிரகாஷ் பிசியாக உள்ளார் என்பதும் அவர் தற்போதுதங்கலான்’ ‘அமரன்’ ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ’சூர்யா 43’  உட்பட கிட்டத்தட்ட 10 படங்கள் கைவசம் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Advertisement