புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நெப்போலியன். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.தியாகத்தின் மூலம் தன் பெயரை மண்ணில் நிறுத்திய நெப்போலியன், இன்று தனது 61வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். குடும்பத்தின் மீது கொண்ட அதீத பாசத்தாலும் சமூகத்தின் மீது கொண்ட பொறுப்புணர்வாலும் நெப்போலியன் தனது வாழ்க்கையை பலருக்கு முன்னுதாரணமாக உருவாக்கியுள்ளார்.
தனது மகனை போன்ற நிலைமையை பிறர் சந்திக்கக்கூடாது என்பதற்காக, அவர் இலவச மருத்துவமனையை துவங்கியதும் குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் தற்போது தனது மகனுக்கு மிகவும் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளமை மற்றும் பல ஏழைகளுக்கு அநாமதேயமாக உதவி செய்த நெப்போலியன், இவரது உதவிகள் வலுவான சமூக சேவைக்கான அடிப்படையாக அமைந்தன.
அரசியல் மற்றும் சினிமாவில் சிறந்த நிலையை அடைந்திருந்தாலும், தனது பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் அந்த வாழ்வில் இருந்து விலகினார். இவரது தியாகம் மற்றும் மனிதாபிமானம் பலருக்கு ஆச்சரியத்தையும் பாராட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
Listen News!