• Jan 18 2025

ஆம்பள குளிக்கிறதை எட்டி பாக்குறாங்க; இது மட்டும் சரியா? திடீர் குற்றச்சாட்டை முன்வைத்த பிக்பாஸ் பிரபலம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் பிரதீப் வெளியேற்றப்பட்ட நாளிலிருந்து சமூக வலைதளங்களில் பிரதீப்பிற்கு ஆதரவாக justice for pradeep    என்ற ஹேஷ் டேக்கே வைரலாகிவருகின்றது. 

பிகா பாஸ் வீட்டில் பெண்களிடம் தவறான அணுகுமுறையில் பழகியது என எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியனுப்பினார்கள். இவர்களுக்கு ஆதரவாக கமலும் பேசியது இணைய வாசிகளுக்கு பெரும் கோபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. 

இந்த நிலையில்,பிரதீப் வெளியேற்றம் குறித்து பிக் பாஸ் பிரபலமான தாமரை செல்வி தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். 


மேலும், பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை தாழ்ப்பாள் போடவில்லை என்று குற்றம் சாட்டியை நிக்சன் குறித்து தாமரை செல்வி தன்னுடைய கோபத்தை காட்டியிருக்கிறார். 

மேலும் அவர் கூறுகையில், இந்த சீசனை ஆரம்பத்தில் இருந்தே பார்த்து வருகிறேன், அப்போ எனக்கு பிரதீப்புடைய விளையாட்டு பிடிச்சது. ஆனாலும் அவர் ஒரு சில நேரத்தில அவர் பேசும் வார்த்தை எனக்கு பிடிக்கல. ஏன் இந்த பையன் திடீர்னு தப்பு தப்பா பேசுறானேனு நினைப்பன்.

ஆனா அவன் அம்மா அப்பா இல்லாமல் வளர்ந்து இருக்கான். உள்ளே எல்லா போட்டியாளர்களும் கெட்ட வார்த்தையும், இரட்டை அர்த்த வார்த்தைகளும் பேசும் போது இவனும் அப்படி இருக்கிறார் அவ்வளவுதான். ஆனால் திடீரென்று கடந்த வாரத்தில் பிரதீப்பை வெளியேற்றியது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 

பிக் பாஸ் வீட்டிற்குள் பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லி வெளியே அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதுமே எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லவே முடியாது. பிக் பாஸ் வீட்டிற்குள் எவ்வளவு பாதுகாப்பு இருக்கும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். 


அதுபோல பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை பூட்டிக்கொண்டு போகவில்லை என்று நிக்சன் குற்றச்சாட்டு வைத்திருந்தார். அது சரிதான் பிரதீப் அப்படி கதவை பூட்டிக் கொள்ளாமல் போனது தவறுதான். ஆனால் பிரதீப்பை வெளியேற்றுவதற்கு முந்தைய நாள் இரவில் பெட்ரூமில் பூர்ணிமா குரூப்பில் உள்ளவர்கள் விஷ்ணு குளித்துக் கொண்டிருப்பதை நான் முழுசா பார்த்து விட்டேன் என்று சொல்லி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க. இதை நானும் டிவியில் பார்த்தேன். இது மட்டும் சரியா? ஒரு ஆம்பள குளிச்சுகிட்டு இருக்கும்போது அவன் கதவை லாக் பண்ணாமையா குளிச்சிருப்பான்? அதை எதுக்கு இவங்க போய் எட்டிப் பார்க்கணும்? இவங்க பண்ணுனா மட்டும் சரியா? என்று கடும் கோபமாக அந்த பேட்டியில் தாமரை செல்வி கேள்விகளை எழுப்பி இருக்கிறார். 

Advertisement

Advertisement