• May 16 2024

சர்ச்சையில் சிக்குவாரா கமல் ? பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் விக்ரம். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகாமல் இருந்த நிலையில் இப்படத்தை ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனரர். கமல் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும்.

சமீபகாலமாக தமிழில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் பெரிதாக வெற்றிபெறாத நிலையில் மற்ற மொழி படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. எனினும் இதன் காரணமாக சிலர் தமிழ் நடிகர்களையும், தமிழ் படங்களையும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே கமலின் விக்ரம் திரைப்படம் அந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் என்பதே பலரின் நம்பிக்கையாக உள்ளது. எனினும் இந்நிலையில் கமலின் தீவிர ரசிகரான இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் ஆகிய பிரபல நடிகர்களர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் ஜூன் 3 ஆம் ஹிந்தி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியானது. கமல் எழுதி பாடியிருக்கும் இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

இருப்பினும் இப்பாடல் சில சர்ச்சைகளில் சிக்கும் வாய்ப்பும் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்பாடலில் ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே என்று வரிகள் இடம்பெற்றுக்கும். எனவே கமல்ஹாசன் ஒன்றிய அரசை தாக்கித்தான் இந்த வரிகளை எழுதியுள்ளார் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த பாடல் சர்ச்சையில் சிக்கும் வாய்ப்பு அதிகம் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. இதற்கு முன் பல கமல் படங்கள் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் இப்பாடலும் சர்ச்சையில் சிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/1wa4TmDc_70


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement