• May 17 2024

விஜய் சேதுபதி மனைவியை விவாகரத்து செய்யப்போகின்றாராம் -புதிய சர்ச்சையைக் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லன் மற்றும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவரைப் பற்றிய சில தகவல்களை நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

அதாவது விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் சேர்ந்து ரம்மி, கா.பெ. ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். மேலும் ஐஸ்வர்யா ராஜேஷின் வளர்ச்சிக்கும் விஜய் சேதுபதியின் உதவி அதிகமாக இருந்தது.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது காதலித்து வருவதாக பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் விஜய்சேதுபதி ஒத்துக் கொண்டதாக பயில்வான் தெரிவித்தார். மேலும் விஜய் சேதுபதிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவரது மனைவிக்கு இந்த விஷயம் தெரியவர ஐஸ்வர்யா ராஜேஷ் மீது செம காண்டில் இருந்தாராம்.

இதனிடையே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்த நிலையில், விவாகரத்து வரை இந்த விஷயம் போயுள்ளதாம். பின்னர் இப்போது தன்னுடைய மனைவியிடம் சமாதானமாக பேசி நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம் என விஜய்சேதுபதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement