• May 11 2024

எதிர்பார்ப்பில்லாத அன்பே நிரந்தரம்- அஜித் பிறந்தநாளில் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்த விக்னேஷ் சிவன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் கடந்தாண்டே கமிட் ஆன திரைப்படம் தான் ஏகே 62. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என கடந்தாண்டு மார்ச் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

 அஜித்தின் துணிவு படம் ரிலீஸ் ஆன பின்னர் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை தொடங்க விக்னேஷ் சிவன் ஆயத்தமாகி வந்த சமயத்தில் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை அப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டனர்.விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனியை இயக்குநராக கமிட் செய்தது லைகா.


 தொடர்ந்து அஜித் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பிறந்தநாள் பரிசாக ஏகே 62 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘விடாமுயற்சி' என்ற மாஸ் ஆன டைட்டிலை வைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.


மேலும் அஜித்தின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வரும் நிலையில் விக்னேஷ் சிவனும் என்னை அறிந்தால் ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு அஜித்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement