விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு ரியாலிட்டி ஷோவாகவே ஒளிபரப்பாகி வரும். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட முதல் வாரத்தில் இருந்தே சுவாரசியமாக காணப்படும். ஆனால் இந்த முறை ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் பாதி நாட்களைக் கடந்த பிறகு தான் விறுவிறுப்பாக செல்கின்றது.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட டெவில் ஏஞ்சல்ஸ் டாஸ்கின் மூலம் தான் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் அதிகரித்தது. அதுவரையில் இந்த சீசன் பற்றி படுமோசமான விமர்சனங்கள் தான் முன்வைக்கப்பட்டு வந்தன. இறுதியாக நடைபெற்ற ஏஞ்சல்ஸ் டேவில் டாஸ்க்கின் மூலம் தான் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது.
இந்த டாஸ்கிலும் முதல் நாளில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது நாளில் இல்லை. அதற்கு காரணமாக அமைந்தது ஜாக்குலினும் சௌந்தர்யாவும் தான். அவர்கள் தாங்கள் யாரையுமே கொடுமைப்படுத்த முடியாது என்று முட்டுக்கட்டை போட்டார்கள். ரஞ்சித் டெவிலாக விளையாடிய போதும் அவருடைய ஆட்டத்தை களைத்து அதற்கு பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் வார இறுதியில் அவர்களை விஜய் சேதுபதி வெளுத்து வாங்கி இருந்தார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆட்டத்தை கெடுக்கும் வகையில் விளையாடுவதற்கு பதிலாக வெளியேறுங்கள் என்று இருவரையும் சாடியிருந்தார். எனினும் நாமினேஷனில் சிக்கி உள்ள பத்து போட்டியாளர்களில் இருந்து ஜாக்குலினும் சௌந்தர்யாவும் தான் முதலில் சேவ் ஆன இரண்டு நபர்களாக காணப்படுகின்றார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்க்ஷன் நடைபெற்றுள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆனந்தியும் சாச்சனாவும் எலிமினேட் ஆகி வெளியேறி உள்ளார்கள். நீண்ட நாட்களாக சாச்சனாவை விஜய் சேதுபதி காப்பாற்றி வருவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் சாச்சினாவை வெளியேற்றியுள்ளார்.
இதனால் டம்மி பீஸ் ஆக இருக்கும் சத்யா, ராஜன், ரஞ்சித் ஆகியோரை விட்டு விட்டு நன்றாக கேம் விளையாடும் சாச்சனாவை எலிமினேட் செய்ததாக ஒரு சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள். ஆனாலும் சாச்சனா வெளியேறியது நிம்மதி என இன்னொரு சாரார் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!