• Jan 19 2025

இந்த சீசன்ல நீங்க தான் பெரிய ஸ்டார்..உங்களால தான் அவங்க வளர்ந்து நிக்கிறாங்க..! மாயாவின் மண்டையை கழுவிய போட்டியாளர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 


இந்த சீசனில் மட்டும் தான் இதுவரையில் இல்லாதது போல அதிக வைல்ட் கார்ட் என்ட்ரி ஆகியுள்ளனர்.

அதன்படி, தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியான விஜய் வர்மா, அனன்யா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் மூலம் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

இந்த நிலையில், மாயாவிடம் பேசிய பூர்ணிமா, ' உங்களால தான் தினேஷ், அர்ச்சனா வளந்து இருக்காங்க.. நீங்க ஒன்டுமே பண்ண வேணாம் சும்மா இருந்தா போதும்' என்பது போல கதைத்துள்ளார்.


குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. மேலும் அதில் அவர் கூறும் போது,

'அவங்க இப்படி வளந்து நிக்க நீங்க தான் முதல் காரணம்..நீங்க ஏதும் பண்ணாம இருந்தாலே போதும். முதல் வாரம் அடையாளமே தெரியாம இருந்தாங்க.. அதுக்கு காரணம் நான்.. அத பெருமையா சொல்லுவன்.. நீங்க ஒரு ஸ்டார். உண்மையாவே இந்த சீசன்ல் நீங்க பெரிய ஸ்டார். ஆனா அத உடைச்சி கொடுத்துடீங்க...' என மாயாவிடம் புலம்பி தீர்த்துள்ளார் பூர்ணிமா.


Advertisement

Advertisement