இந்திய திரையுலகின் மிகப்பெரிய கற்பனைத் திரைப்படங்களில் ஒன்றான ‘2.0’ படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்குப் பதிலாக அமீர்கானைத் தேர்வு செய்ய திட்டமிட்டதாக ஒரு பரபரப்பு தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் அமீர்கான் சமீபத்திய பேட்டியில் இதை உறுதி செய்யும் வகையில் தகவல் ஒன்றினைக் கூறியுள்ளார். அதில் இயக்குநர் ஷங்கர், ரஜினிக்கு உடல்நிலை பிரச்சனை காரணமாக அமீர்கானை ‘2.0’ படத்தில் நடிக்க கேட்டதாக அவர் கூறியுள்ளார். எனினும் அதற்கு அமீர்கான் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2018ம் ஆண்டு வெளியான ‘2.0’ படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய அறிவியல் பூர்வமான திரைப்படங்களில் ஒன்றாக அமைந்திருந்தது. அத்துடன் ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமிஜாக்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தில், ரஜினி முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே ரஜினியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்குப் பதிலாக அமீர்கானை ஷங்கர் அணுகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
மேலும் அமீர்கான் கூறியதாவது, " ‘2.0’ படம் உருவாகும் போது, ரஜினி சார் உடல்நிலை சரியில்லை என்பதால், அவருக்குப் பதிலாக என்னை நடிக்க இயக்குநர் ஷங்கர் கேட்டார். ஆனால், அதற்கு நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால், அந்த கதாபாத்திரத்திற்கு ரஜினி சார் மட்டுமே பொருத்தமானவர்!" என்றார். இந்தத் தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
Listen News!