• May 16 2024

தளபதி 66 படப்பிடிப்பில் இருந்து கசிந்த புகைப்படம்-குழம்பி தவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் தளபதி 66. தில் ராஜு இப்படத்தை தயாரித்து வருகின்றார்.

ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கிறார்கள்.

மேலும், தமன் இசையில் இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் ஏற்கனவே மூன்று பாடல்களை இசையமைத்துவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தில் சரத்குமார் மற்றும் மனோபாலா இருவரும் இருக்கிறார்கள். இந்த புகைப்படத்தை பார்க்கும்பொழுது இப்படத்தில் சரத்குமார் பொலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்று தெரிகிறது.

ஒரு பக்கம் இது தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படம் என்று கூறி வர, மற்றொரு புறம் இது வேறொரு படத்தின் படப்பிடிப்பு என்றும் கூறப்பட்டு வருகின்றார்கள் ரசிகர்கள்.

https://www.youtube.com/embed/HdLp6EOROq0

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement