• May 17 2024

பார்த்து பழகுங்கப்பா நம்ம தளபதி கிட்ட ….விஜய்யை பார்த்து மிரளும் ஹைதராபாத்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர்தான் நம்ம தளபதி விஜய் . தளபதி என்று சொன்னாலே தெரியாதவங்க யாருமில்லை .

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தனது 66 வது படத்தில் நடித்து வருகின்றார் .இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்றுக்கொண்டுள்ளது .

இங்கு விஜய் ஹைதராபாத்தில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தான் தங்கி நடித்துக்கொண்டுள்ளார் . தினமும் 10 மணிக்கு ஷூட்டிங் வருகின்ற நம்ம தளபதி விஜய் 6 மணி வரை ஷூட்டிங் ஸ்பாட்லயே நிற்பார் , ஒரு நாள் கூட நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நம்ம தளபதி அவருடைய சீன் முடிந்தாலும் போய் ரெஸ்ட் எடுக்க மாட்டார்.

அந்த இடத்திலேயே கதிரையை போட்டு உட்காருவார் . அதன் பின் அவருடைய ஷாட் வரும்போது மறுபடியும் ரெடி ஆகி நடிக்க வந்துவிடுவார் . அதுமட்டுமில்லாம சாப்பாட்டுக்குத்தான் காரவனுக்கு செல்வார் .

இவருடைய இந்த செயலினால் ஹைதராபாத்தில் உள்ள நடிகர் நடிகைகள் ஷாக் ஆகிவிட்டனர். ஏனென்றால் சாதாரணமாக சின்ன நடிகர் நடிகைகள் எப்போ ஷூட் முடியும் எப்போது காரவனுக்கு சென்று ரெஸ்ட் எடுக்க வேணும் என்று இருப்பார்கள் .

அப்பிடியிருக்கும் பட்சத்தில் இவ்வளவு பெரிய நடிகர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் , இப்படியான பெருமையான நடிகர் இவரு, இவ்வளவு சிம்பிளா இருக்குறாரு என்று ரொம்பவே ஷாக் ஆகிட்டாங்க … இந்நிலையில் அங்கு தளபதி விஜயை பார்த்த ரசிகர்கள் இதனால் தான் இவருக்கு இவ்வளவு சம்பளம் , இதனால் தான் இவருக்கு இன்னும் மாஸ் குறையாம இருக்கு மற்ற நடிகர் நடிகைகள் இவரிடம் பார்த்து பழக வேண்டும் என்று கருத்து தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள்

https://www.youtube.com/embed/HdLp6EOROq0

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement